Posts

பாஹ்ய-குத்திருட்டி மதங்கள் .

பாஹ்ய மதம் 11ம், குதிருஷ்டி மதம் 6 மாக , 17 மதங்களும் தத்வ ஹித புருஷார்த்தங்களை விவிதமாக விப்பிரதிபத்தி பண்ணின படியை இனிச் சொல்லுவோம்.: லோகாயதிகன் : ஆத்மா -   தேகமே  பரமாத்மா -   இல்லை  கர்மம் -  இல்லை. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றிருக்கிற நாஸ்திகர்கள் இவர்கள். ஸ்வர்கம்  - உலக இன்பம். நரகம்  - சத்ரு சைன்யம் , பசி, பிணி, வியாதி etc  இதற்கு மேற்பட அவ்வருகில்லை . தத்வம் -  ஒன்றே.   தேக அதிரிக்த எதுவும் இல்லை. ஜகத் -  பரமாணு சங்காதம்  சம்ஸாரம் -  பூத சதுஷ்டய கூட்டரவு  சாதனம் -  பூத சதுஷ்டய பிரிவு  முக்தி -  சைதன்ய நாசம். வெற்றிலை+பாக்கு+சுண்ணாம்பு சேர  பச்சை+பழுப்பு+வெளுப்பு நிறம் சேர  உதட்டில் சிகப்பு நிறம் உண்டாவதுபோல  பூத சதுஷ்டய கூட்டரவில் சைதந்யம் உண்டாகும். மரணத்தில் அந்த சைதன்யம் நசிகை மோக்ஷம்.  ஞானான் மோக்ஷம் என்று சாஸ்திரம் செல்லுகையில், ஞானம்  நசிகை மோக்ஷம் என்பது இவர்கள் கொள்கை. ஜைனன் : ஸப்த பங்கி வாதிகள்   -  1. ஸ்யாத்  அஸ்தி -    உள்ளதாக  இருக்கலாம் 2. ஸ்யான்  நாஸ்தி - இல்லாததாக இருக்கலாம் . 3. ஸ்யாத்  அஸ்திச ந
Recent posts